அய்யா அவர்கள் வாழையடி வாழையென சித்தர் மரபில் வந்தாலும் மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்தார். இந்த மனித குலம் வாழ்வின் உண்மையான நோக்கத்தை தெரிந்து, அறிந்து, உணர்ந்து கடைத்தேற வேண்டும். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க வேண்டும் என்பதில் மிகவும் நாட்டம் கொண்டவர்.
‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்பதைப்போல் சமூகத்தில், பொருளாதார நிலையில் ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் வயது வித்தியாசம் எதுவாக இருந்தாலும், சுவாமி தனது அருள் மழையை இந்த பரு உடலில் இருந்தபொழுது எந்தவித பாரபட்சமுமின்றி வழங்கினார். இப்போது அருவமாய் இருக்கும்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
தமிழ் மாதந்தோறும், முதல்தேதியன்று சுவாமியின் குருவான கருவூராருக்கு, பசுபதிஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அவரது ஜீவசமாதியில் உள்ள ஐம்பொன திருமேனிக்குச் சிறப்பு அபிN~கமும், ஆராதனையும், மலர் அலங்காரமும், சுவாமியின் பக்தர்களால், அவரது முன்னிலையில், அவரது சீரிய வழிகாட்டுதலுடன் நடந்து வருகிறது.
சிறப்பு அபிN~கம் முடிந்து, மலர் அலங்காரம் தொடங்கும். அப்போது கிடைக்கும் கால இடைவேளையில், சுவாமியின் அருளுரைகள் சுவாமியின் அன்பர்களில் ஒருவர், சண்முகம் அல்லது முனியாண்டி படிப்பார்கள். அவ்வாறு அளிக்கப்படும் அருளுரைகள் சுவாமி தன் வாழ்வில் உண்மையென அனுபவபூர்வமாக உணர்ந்த கருத்துக்களாக இருக்கும். சுவாமி பட்டினத்தார், சித்தர் பாடல்கள், குருஞானசம்பந்தர் பாடல்கள், திருக்குறள், பகவத்கீதை (ஐயயந்திலால் கோயங்கன உரை, கீதா பிரஸ்) திருமந்திரம் போன்றவற்றில் உள்ள கருத்துக்களை எடுத்துக்காட்டுகளாக கூறி விளக்கியருப்பார். “உங்களுக்கு வெறும் ஜீஸ் மட்டும் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். முழுப் புத்தகத்தையும் படிக்க வேண்டியதில்லை”, என்பார் சுவாமி எடுத்துக்கொடுத்த கருத்துக்களை மனதில் உள்வாங்கி செயல்பட்டாலே உலக வாழ்க்கையில் ஏற்படும் தடை தாமதம் தோல்விகளைத் தவிர்த்து ஞான வாழ்க்கையில் வெற்றி நடைபோடலாம். வாழ்வின் இலட்சியத்தை அடையலாம்.
சுவாமி கூறுவார், “எல்லா மதங்களும், சமய நூல்களும், ஞானிகளும் கூறுவது ஒரே உண்மையைத்தான். அதனால் உண்மையைத் தேடி, அங்கே இங்கே என்று அலைய வேண்டியதில்லை”
ஒவ்வொருவர் உள்ளேயும் இறைவன் உணர்வாய், உறைந்து கொண்டிருக்கின்றான். ‘நான்’ ‘எனது’ என்ற அகங்காரமற்ற நிலையில், விருப்பு வெறுப்பின்றி உள்முகமாக நம் பார்வையைச் செலுத்தினால் இறைவனை உணரலாம்.
“எல்லாம் ஒரே மாவுதான், மாவை தட்டிப் போட்டால் வடைÉ அதே மாவை உருட்டி போட்டால் போண்டாÉ பிசறி போட்டால் பக்கோடாÉ அதே மாவில் (வாழைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம்) நனைச்சி போட்டால் பஜ்ஜி. வி~யம் ஒண்ணுதான் சொல்லும் விதம்தான் வேறு” என்பார்.
சுவாமி இப்படி கூறும் ஆருளுரைகளை புத்தக வடிவில் தொடுத்தால் நன்றாக இருக்கும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை சுவாமி முன் வைத்தோம், சுவாமி சரி என்றார்.
அதன்பிறது நானும் எனது துணைவியார் – பார்க்கொடியும்
சந்திரசேகர், சண்முகம் மூலமாக சுவாமி எழுதிய பல ளுஉசipவ களைச் சேகரித்து, சுவமாயின் அருளாசிகளுடன் வரிசைப்படுத்தினோம், சிறுசிறு தலைப்புகள் கொடுத்தோம். திரு இராம் இருசுப்பிள்ளை, பழுத்த ஆன்மிகவாதி, இல்லறத்துறவி, பூ சா சோ தமிழ்த்துறையில் பணியாற்றியவர் எனது துணைவியாரின் தந்தையார், அமரர் ச. கண்ணப்பன் அவர்களுடன் கள்ளக்குறிச்சியில் ஒன்றாகப் படித்த பள்ளித்தோழர் அத்தகைய பெருந்தகை அதை பலமுறை படித்து திருத்தங்களைச் செய்து கொடுத்தார்.