Location

சுவாமியின் வீடு, பசுபதீஸ்வரர் ஆலயத்தை சுற்றி அமைந்துள்ள மடவிளாகத் தெருக்களில் வடக்கு பக்க தெருவில் உள்ளது. சுவாமியின் வீட்டிற்கு பசுபதீஸ்வரர் ஆலயத்தின் இராஜகோபுர வாயில் ஏறத்தாழ 100 மீட்டர்களுக்குள்தான் இருக்கும்.

வீட்டின் முகப்பு வாயிலில், வலதுபுறம் உடலுக்கு இளைப்பாறுதல் தரும் புங்க மரம் அமைந்துள்ளது. அதைத்தாண்டி வீட்டின் உள்ளே நுழைந்தால் ஓலை வேயப்பட்டு சிறிய முகப்பு உள்ளது. அதற்கு அடுத்தப்பகுதியில் இடதுபுறம் ஒரு சிறிய திண்ணையும் வலது புறம் நீளமான திண்ணையும் உள்ளன.

இடது புறத்திண்ணையில் ஒற்றைத் தூண் உள்ளது. இந்தத் திண்னையில்தான் சுவாமி பெரும்பாலும் கோரைப்புல் பாயில் அமர்ந்திருப்பார். ஒருசில வேலைகளில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பார். ஒரு தலையணை, ஒரு மிருதுவான கமபளி, வெற்றிலைப்பெட்டி, நீல்தடி, ஒரு தண்டக்கோல் இவை அருகிலிருக்கும். எதிரில் நீளமான திண்ணையில் ஒரு பழைய (சின்னி) மின்விசிறி இருக்கும். மூன்று ஆண்டிற்கு முன்பு ஒரு பக்தர் வாங்கி கொடுத்த வாட்டர் கூலர் எனப்படும் நீருடன் கூடிய மின்விசிறி இருக்கும். சுவாமியைச் சுற்றிலும், படிக்கட்டிலும், எதிர்த்திண்னையிலும் அன்பர்கள் அமர்ந்திருப்பார்கள்.

இந்த திண்ணையில் அமர்ந்துதான் சுவாமி, பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார். அதை அடுத்துள்ள பகுதியின் மேற்தளம் பழைய கால முறைப்படி காரையால் பூசப்பட்டிருக்கும்.

இந்தப்பகுதியில்தான் அய்யாவின் உடைமைகள் இருக்கும். மிகவும் பழமையான ஒலிநாடாப்பெட்டி(வுயிந சநஉழசனநச)(இதை அய்யாவுக்கு மட்டுமே இயக்கத் தெரியும்), பகவத்கீதை, ஐயந்த்லால் கோயங்கா, திருவாசகம், பஞ்சாங்கம், வெற்றிலை பாக்கு, புகையிலை, அய்யா பயன்படுத்தும் ஒரு சில வேட்டித் துண்டுகள் இவை அனைத்தும் ஒரு பழைய கட்டிலின் மீது வைக்கப்பட்டிருக்கும்.

மறுபகுதியில் ஒரு சிறிய அறை. இதுதான் அய்யா தவம் செய்யும் அறை. இங்குதான் ஸ்படிக லிங்கம், சிவன், அய்யாவின் குருவான கருவூரார், மற்றும் பல தெய்வ உருவங்களும் வைக்கப்பட்டிருக்கும்.

இந்தப பகுதியை கடந்து சென்றால் தாழ்வாரத்தில் இடதுபுறம் தண்ணீர் தொட்டி, வலதுபுறம் தரையில் அமர்ந்து சாப்பிடும் வண்ணம் இடம் உள்ளது.

அடுத்து திறந்தவெளி முற்றம் அதையும் தாண்டினால், சமையலறை. அதை ஒட்டிய கூடம் பிறகு வருவது தோட்டம். அய்யாவின் வீடு அய்யாவைப் போன்றே எளிமையானது.