Siddhar Balusamy

அய்யா என்றும், சுவாமி, குரு என்றும் தனது பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பெறும் சுவாமிகள் 14.05.1937 ஆம் ஆண்டு திரு. நடேச முதலியார் மற்றும் திருமதி. கல்யாணி அம்மாவுக்கு மகனாகப் பிறந்தார். சுவாமிக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் உண்டு. ஆனால் இறைவனின் திரு உள்ளப்படி சுவாமிகள் இளம் வயதிலேயே பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தது.

இரண்டு சகோதரிகளும் நோயின்காரணமாக அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இறந்துவிட்டனர், சுவாமியின் அன்பே உருவான தாயரும், சுவாமிக்கு 10வயது நிறையும் முன்னரே உலக வாழ்வை நீத்தார். ஆனால், இளம் வயதிலேயே சுவாமியை அவரது அம்மா, அருகிலுள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்குச் செல்லத் தூண்டுவார். அங்கே தேவராம், திருவாசகப் பாடல்கள் பாடும்போது அதை மனம் ஒன்றிக் கேட்பார். பட்டினத்தார் பாடல்களிலும் சிறுவயதிலேயே அவரது மனம் இயல்பாகவே

சுவாமியின் வீடு பசுபதிஸ்வரர் கோவில் வடக்கு மடவிளாகத்தெருவில் அமைந்துள்ளது. அடிக்கடி கோவிலுக்கு சென்று அங்கு ஓதுவார் மூர்த்திகளாலும், இசைக் கலைஞர்களாலும் இசைக்கப்பெறும் பாடல்களை ‘செவிநுகர் கனிகளாக’ சுவாமிகள் அனுபவித்ததை அடிக்கடி நினைவு கூர்வதுண்டு.

கல்வி – வாழ்க்கைக் கல்வி, வயிற்றுக்கல்வி என இருவகைப்படும். முன்னது உயிர் தொடர்புடையது, பின்னது உடல் தொடர்புடையது. நமது வழிபாட்டுத்தலங்கள் எப்படி ஆன்மாவுக்குத் தேவையான கல்வியை வழங்கி வந்தது அதனால் எப்படி சமூகம் பயன்பெற்றது எனபதற்கு சுவாமிகளின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.

வெறும் சடங்கு, சம்பிரதாயங்களில்; மட்டும் மூழ்கி விடாமல் இறை, உயிர் உண்மையை வெளிப்படுத்தும் அறநெறிச் சாலையாக கோயில்கள் விளங்கவேண்டும். ‘பசு’ என்றால் உயிர், ‘பதி’ என்றால் தலைவன் என்று பொருள். ஆலயம் – ஆ என்றால் ‘பசு’ அதாவது உயிர்É அது இறைவனோடு இரண்டறக் கலக்கும். அதாவது லயமாகும் இடமே ஆலயம். இந்த வகையில் சுவாமிகளின் வீட்டிற்கு அருகே அமைந்துள்ள பசுபதீஸ்வரர் ஆலயம் சுவாமிகளுக்கு இளமையிலேயே ‘இறை, உயிர் உண்மை’யை விளக்கும் பள்ளியாக அமைந்தது இறைவனின் திருஉள்ளம் அன்றி வேறில்லை.

“பக்தி நெறியில் வாழ்க்கைத் தொடங்கி ஞான மார்க்கத்தில் முடிவுற வேண்டும்.” என்பது சுவாமிகளின் அருள்வாக்கு.

கோவிலுக்கு செல்வது, சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது என்பது ஆரம்பநிலை. கல்லிலும், செம்பிலும் இறைவனைக் கண்டு வழிபடத் தொடங்கி, முடிவில் நம் ஒவ்வொருவர் உள்ளும் மூச்சாக, உயிராக, உணர்வாக உறைபவனே இறைவன் என்று அறிந்து, இறுதியாக உணர்வு பூர்வமாக அனுபவ ஞானமாக இறைவனை அறிவதே ஞானமார்க்கத்தின் இலட்சியம்.