சுவாமி, இறையருளாலும் பல்லாண்டுகளாகச் செய்த தவத்தின் விளைவாகவும், மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தார்.
‘நான்’ ‘எனது’ என்ற இருபற்றுகளும் அறவே அற்றவர். இந்த பரதேசிக்கு, மான ரோ~ம் என்று எதுவுமே கிடையாது என்பார்.
ஒருமுறை புதியதாக பொறுப்பேற்றிருந்த இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர்(ஒரு பெண் அதிகாரி) மார்கழி மாத முதல் நாள் கருவூரார் பூஜையை காலை 6 மணிக்கு முன்பாகவே முடித்துவிட வேண்டும் என்றார். சுவாமியின் அன்பர்களும் மற்ற வெளியூர் அன்பர்களும் காலை 8.20 மணிக்கு வைக்க வேண்டும் என்றனர். அப்பொழுதுதான் எல்லோரும் பங்கு கொண்டு பூஜையை சிறப்பாக செய்ய முடியும் என்றெல்லாம் வாதாடிப் பார்த்தனர்.
“மற்ற கோயில்களில் இறைவனுக்கு 4 கால பூஜை செய்வார்கள்;;;;;;; சித்தர்களுக்கு 1 கால பூஜை போதும் அது 12 மணிக்கு முன்னால் செய்தால் போதும்” என்று கூறிப்பார்த்தனர்.
ஒன்றும் முடியாத போது சுவாமி என்னுடன்(கமி~னர் இராஜேந்திரன்) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். “தம்பி, நானே சென்று அந்தப் பெண் அதிகாரியுடன் பேசுகிறேன என்றார். நமக்கு, பூஜை சிறப்பாக நடக்க வேண்டும், வெளியூர் அன்பர்களும் பங்கு கொள்ள வேண்டும் அதற்காக நானே சென்று பேசிப்பார்க்கிறேன்” என்றார்.
“உங்கள் நிலைக்கு ஏன் சுவாமி நீங்கள் சென்று பார்க்கிறீர்கள், அன்பர்கள் சொல்லிப்பார்க்கட்டும் முடியவில்லை என்றால் எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கட்டும்” என்றேன்.
மீண்டும் சுவாமி “வெளியூர் மற்றும் உள்;ர் அன்பர்களின் பொருட்டுத்தான் செல்கிறேன் இந்த இத்துப்போன பரதேசிக்கு மானம்,
அன்பர்களின் தன்மை அறிந்து அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து, அது 6 வயதுக் குழந்தையாக இருந்தாலும் 80 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களாக இருந்தாலும், பெரும் பணம் படைத்த செல்வர்களாக இருந்தாலும், ஒன்றுமே இல்லாத ஏழை எளிய மக்களாக இருந்தாலும், அவர்கள் மேல் அளவற்ற கருணையும், இரக்கமும் சுவாமி காட்டுவார்.
‘சமபாவனை’ என்பது சுவாமியின் செய்கைகளில் அப்படியே வெளிப்படும். யாரையாவது இடித்துப் பேசினாலும் அந்த அன்பர் மனம் திருந்தி நல்வழியில் செல்ல வேண்டுமே என்ற எண்ணம் தவிர வேறொன்றுமிருக்காது. இதைப்பலமுறை சுவாமியே என்னிடம் கூறியிருக்கிறார்.
சுவாமி எதிர்பார்ப்பதெல்லாம், உள்ளத் தூய்மையையும், அகங்காரம் அற்ற நிலையையும்தான், பணத்தாலோ, பதவியாலோ சமூகத்தில் ஒருவர் உள்ள நிலைமையினாலோ யார் ஒருவரும் சுவாமிக்கு நெருக்கமாக உறவு கொண்டாட முடியாது.
‘யான் என்று என்றும் செருக்கருப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்’
என்பது வள்ளுவம்.