முக்காலமும் உணர்ந்த ஞான

சுவாமி தனது கடுந்தவத்தாலும், இறைஅருளாலும் மிகவும் உயர்ந்த நிலையை(சித்தர்) அடைந்திருந்தார். இருந்தாலும் ‘மனிதப் பிறவியின் நோக்கம் பிறவாமை’ என்பதை உணர்ந்து அதற்காக பக்தன் பாடுபட வேண்டும். கிடைத்ததற்கரிய மானிடப்பிறவியை வீணாக்கிவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில், மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களுக்கு வழிகாட்டி மரமாக மட்டுமில்லாமல், வழித்துணையாகவும் அய்யா செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

தனது தவவலிமையால் மாபெரும் சக்தியைப் பெற்றிருந்தாலும் சித்துக்கள் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தாலும் பக்தர்களை கவரும் நோக்கில் ஒருபோதும் தனது சக்தியை வெளிப்படுத்தியதில்லை.

மாறாக, ஒருமுறை திருக்குறள் இரவீந்திரனிடம்(கோவை) பேசிக்கொண்டிருக்கும் போது சுவாமிகேட்டார் ஏன் என்னைப் பார்க்க நீங்கள் எல்லாம் வருகிறீர்கள்? நான் என்ன இப்படி கையை அசைத்தால் தங்கம் வருகிறதா? இல்லை பணம் கட்டு கட்டாக கொட்டுகிறதா? நான் ஒன்றும் செய்வதில்லையே ஏன் என்னிடம் வருகிறீர்கள். இந்த இத்துப்போன பரதேசிக்கிட்ட என்ன இருக்கு? எனக்கு ஏன் ஆண்டவன் இப்படி ஒரு நிலையைக் கொடுத்தான்? என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார் அந்த முற்றும், (முக்காலமும்) உணர்ந்த ஞானி.

‘சும்மா’ இருக்கும் சுகத்தை, பேரின்ப பெருநிலையை, சொல், மனம் கடந்த சும்மா இருக்கும் நிலையை அனுபவபூர்வமாக அடைந்தவர் சுவாமி. எனவே அவருக்கு இடம் காலம் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது.

இந்தப் பரு உடல் இருந்த இடத்தலேயே இருந்து கொண்டு அனைத்து இடங்களையும், அண்ட சராசரங்களையும் பார்க்க வல்லவர். ஆனால் ஒன்றுமே அறியாதவர் போல நடந்து கொள்வார். குழந்தை மனம் கொண்டவர்.

கடந்தகாலம

நிகழ்காலம