தடுத்தாட்கொள்ளும் அருட்பெருங்கடல

சுவாமிகள் பக்தர்கள் பிறவிப்பிணி நீக்கி பிறவியின் நோக்கமாகிய “மீண்டும் பிறவாமை” என்ற நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் தன்னலம் கருதாது அமைதியாக ஆரவாரமில்லாமல் அனைத்தையும் இயக்கிக் கொண்டு அதே சமயத்தில் தான் ஒன்றுமே செய்யாமல் ‘சும்மா’ இருப்பதாகவும் அய்யா கூறிக்கொள்வார்.

ஆனால் அண்டி வரும் பக்தர்களை மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினர் அனைவர் மீதும் சுவாமிகள் மட்டற்ற கருணை மழை பொழிந்து வருகிறார். ஒவ்வொரு பக்தரும் அவர்கள் குடும்பத்தினர் பலரும் இதை அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளனர்.

ஒருமுறை யோகாசுந்தர் என்பவரும் அவரது மனைவியும் சுவாமியை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள் அவாகள் அப்போது தில்லியிலிருந்தார்கள். கணவன், மனைவி இருவரும் சுவாமியிடம் யதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தனர். சுமாமியிடமிருந்து உரிமையுடன் சுந்தரின் மனைவி வெற்றிலைப் பாக்கு கேட்டு வாங்கி போட்டுக் கொண்டார்கள். சுவாமி அவர்களிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அடுத்தநாள் வரசொன்னார். அவர்கள் இருவரும் வேதாத்திரி மகரி~p அவர்களிடம் அன்பு கொண்டவர்கள் அதன்படி யோகாசன பயிற்சிகளை பிறருக்கும் சொல்லி கொடுத்து வருகின்றனர்.

பிறகு அவர்கள் சுவாமியிடம் வந்து ஆசிகள் பெற்று சென்றனர். அவர்களது மகள் ரேணுகா கரூருக்கு அருகில் ஓரு உறைவிடப்பள்ளியல் தங்கி படித்து வருகிறார். அவரும் சுவாமிகள் ஆசியைப் பெறவேண்டும் என்பது,பெற்றோர்களின் விருப்பம். ஆனால் அவர்களது மகளோ, “எனக்கு வேதாத்திரி மகரி~pயைப் பார்த்ததே போதும்” என்று கூறிவிட்டார்

இது நடந்து ஒருமாதங்களில் சுந்தரின் மகள் தனது வகுப்புத் தோழியின் பெற்றோருடன் மகிழ்வுந்தில்(ஊயச) கரூர் சென்றிருக்கிறார். அவர்கள் பசுபதிஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் முடித்துவிட்டு, மதிய உணவு வேளையின் போது கோவில் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் ஏதாவது உணவகம் சென்று வரலாம் என்ற எண்ணத்தில் வடக்கு மடவிளாகத் தெருவில் நுழைந்துள்ளனர். அங்கே ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அக்கம்பக்கத்தில் உணவகம் இருக்குமா என்று பார்த்திருக்கின்றனர்.

அந்த வேளையில் சுவாமி தனது வீட்டிலிருந்து வெளியே வந்தவர் அவர்களை பார்த்திருக்கிறார். அவர்களை சுவாமி தானாகவே அழைத்து “என்ன, மதிய உணவுக்காக ஓட்டலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா இங்கே வந்து சாப்பிட்டுச் செல்லுங்கள்” என்று அழைத்து தனது அன்பர்களிடம் கூறி அவர்களுக்கு அப்போதே தேவையான உணவினைக் கொடுத்து பசிநீக்கி, உயிருக்குத் தேவையான ஆன்ம உபதேசத்தையும் கொடுத்தருளினார். சுந்தரின் மகளோ இவர்தான் அப்பாவும், அம்மாவும் குறிப்பிட்ட சுவாமிகள் என்று அறியாமலேயே அவர் திருமுன் தானாகவே வந்து சேர்ந்தார்.

முன்னர் மறுத்த சுந்தரின் மகளை, பேரன்பும், கருணையும் நிரமபிய சுவாமி, தானகவே தேடிவரும்படி செய்து அருள் செய்தார்.