ஜீவசமாதியை சுற்றியுள்ள 5கி.மீ சுற்றுவட்டப் பகுதி மிகவும் வறட்சியானது. அதன் வடபுறம் பாறைகள் நிறைந்தது இந்த இடத்தில் முதன்முதலாக தண்ணீர் தேவையை நிறைவு செய்யவேண்டி ஆழ்துளை கிணறு வடகிழக்கு பகுதியில் தோண்டப்பட்டது. அதில் 51ஆம் அடி ஆழத்தில் நீர் கிடைத்தது மேலும் 420 அடி ஆழம் வரை தோண்டப்பட்டது. நிலத்தடி நீர் இயல்பாகவே மிகவும் சுவையாகவும், சுத்தமாகவும் உள்ளது இதுவும் சுவாமிகளின் அருட்செயலே.

நாள்தோறும்;;;;;;;;;;;;;;;; வரும் பக்தர்கள் கூட்டம் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து அய்யாவின் அருளினைப் பெற்று சென்ற வண்ணம் இருக்கின்றார்கள்.

ஜீவசமாதிக்கு வருபவர்கள் மனம் உருகி பிராத்தித்தால் அவர்கள் தேவையறிந்து அய்யா அருள்பாலித்து வருகிறார்.

மாணவர்கள் தேர்வை எந்தவித பயமுமின்றி எதிர்கொள்ளுதல், குழந்தைச் செல்வம் இல்லாதவருக்கு குழந்தைச் செல்வம், உடல் மனம் சம்பத்தப்பட்ட நோய் தீர்த்தல் போன்று பல்வேறு பக்தர்களின் குறையறிந்து ஸ்ரீலஸ்ரீ பாலு சுவாமிகள் அருள் மழையைப் பொழிந்து வருகின்றார்.

நாம் காணிக்கையாக செலுத்த வேண்டியது, வாழக்கையில் உண்மையும், யதார்த்தத்தையும் கடைப்பிடித்து, உள்ளம் உருகி அய்யாவிடம் வேண்டி பரிபூரண சரணாகதி அடைதல் மட்டுமே. நாம் அப்படி நடந்தால் நடக்க வேண்டிய அனைத்தும் – சிறிய காரியமோ, பெரிய செயலோ – தடை தாமதம் தோல்வி நீங்கி, வெற்றிகரமாக நடந்தேறும். இதை நாடெங்கிலும், உலகத்தின் வேறுபாகங்களிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உணர்வுபூர்வமாக உணர்ந்து வருகின்றனர்.